99 வயதில் உலக சாதனை: வயதை வென்ற வீரர் -
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஜார்ஜ் கோரோன்ஸ். 99 வயதாகும் இவர், குயின்லாந்தில் காமன்வெல்த் நீச்சல் போட்டிக்கான சோதனை போட்டியில் பங்கு பெற்றார்.
இது, 100 - 104 வயதுடையவர்களுக்கான போட்டியாகும். வரும் ஏப்ரல் மாதத்தில் தனது 100வது வயதை எட்ட உள்ள ஜார்ஜ், இந்த சோதனை போட்டியில் 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைலில் பங்கேற்று 56.12 வினாடிகளில் போட்டி தூரத்தை எட்டினார்.
இதன்மூலம், கடந்த 2014ஆம் ஆண்டு கனடா வீரர், 50 மீட்டர் தூரத்தை 1 நிமிடம் 31 வினாடிகளில் கடந்து படைத்த சாதனையை, ஜார்ஜ் முறியடித்துள்ளார்.
போட்டி முடிந்ததும் ஜார்ஜ் கூறுகையில், அனைவருக்கும் நன்றி. உங்கள் கைத்தட்டல்கள் என்னை உற்சாகப்படுத்தின. நான் சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சியெல்லாம் எடுக்கவில்லை.
80 வயதில் தான் நீச்சலில் ஆர்வம் அதிகரித்தது. ஒன்றைக் கற்றுக்கொள்ள வயது தடையில்லை என தெரிவித்துள்ளார்.
99 வயதில் உலக சாதனை: வயதை வென்ற வீரர் -
Reviewed by Author
on
March 03, 2018
Rating:
No comments:
Post a Comment