அவலத்தின் மத்தியில் தாய்மார்! விடைகாணுமா நல்லாட்சி அரசு?
ஆனால் அவர்களின் கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. குறித்த மாகாணங்களில் காணாமல் போனோரின் உறவினர்கள் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இன்று முல்லைத்தீவில் காணாமல்போனோரின் உறவினர்கள் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் போராட்டம் நடைபெற்ற இடத்தில் தாயொருவர் மயக்கமடைந்து விழுந்துள்ளார்.
மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து சென்ற தாயொருவரின் இரண்டு சிறு பிள்ளைகள் அவரது வீட்டில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக இன்று பிற்பகல் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இச்சந்தர்ப்பத்தில் இந்த நிலையை அறிந்த அந்த தாய் கதறிஅழுதுள்ள சம்பவம் அப்பகுதியில் இருந்தவர்களை சோகத்தில் உள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில் காணமல் போனோரின் உறவினர்களின் கேள்விக்கான பதிலை விரைவில் நல்லாட்சி அரசாங்கம் வழங்கி பொதுமக்களை பாதுகாக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அவலத்தின் மத்தியில் தாய்மார்! விடைகாணுமா நல்லாட்சி அரசு?
Reviewed by Author
on
March 09, 2018
Rating:

No comments:
Post a Comment