முல்லைத்தீவில் 3445 அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு! -
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக மீள்குடியேற்ற அமைச்சினால் கடந்த ஆண்டு 1,157.871 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
யுத்ததினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கடந்த ஆண்டு மீள்குடியேற்ற அமைச்சினுடைய நிதியொதுக்கீடுகளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த ஆண்டு 1,157.871 மில்லியன் ரூபா நிதியில் 3,445 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
இதில் புதிய வீடுகளை நிர்மானித்தல், சேதமடைந்த வீடுகளை புனரமைத்தல், வாழ்வாதார உதவித்திட்டங்கள், கல்வி அபிவிருத்திக்கான கட்டுமானங்கள், குடிநீர் அபிவிருத்தித்திட்டம், மின்விநியோகம், விவசாயம் சார் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவில் 3445 அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு! -
Reviewed by Author
on
March 09, 2018
Rating:

No comments:
Post a Comment