அண்மைய செய்திகள்

recent
-

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக புதிய சாதனை படைத்த வார்னர் -


அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் டேவிட் வார்னர், தென் ஆப்பிரிக்க மண்ணில் தொடர்ச்சியாக 6 அரைசதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில், தென் ஆப்பிரிக்கா - அவுஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா, முதலில் துடுப்பாட்டத்தை துவங்கியது. அதனைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், சிறப்பாக ஆட்டத்தை தொடங்கினார்.
அவர், 79 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம், தென் ஆப்பிரிக்க மண்ணில் தொடர்ச்சியாக 6 முறை 50 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு, தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கல்லீஸ், கடந்த 2002ஆம் ஆண்டு தொடர்ச்சியாக 5 முறை 50 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார்.


Getty Images

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக புதிய சாதனை படைத்த வார்னர் - Reviewed by Author on March 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.