அண்மைய செய்திகள்

recent
-

என் குடும்பத்தையே இப்படி அழிச்சுட்டாரே: கர்ப்பிணி மனைவியை இழந்த கணவர் கண்ணீர் -


தமிழகத்தில் ஹெல்மட் போடாத காரணத்தினால் தம்பதியினர் சென்ற இரு சக்கர வாகனத்தை பொலிசார் எட்டி உதைத்தில் 3 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் பரிதமாக இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மனைவியை இழந்த ராஜா என் மனைவி சொல்லி முடிப்பதற்குள் பொலிசார் எட்டி உதைத்துவிட்டதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், நானும் என் மனைவி உஷாவும் துவாக்குடி டோல் பிளாசா அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தோம்.
அப்போது அங்கு ஆய்வாளர் காமராஜ் உட்பட பொலிசார் பலர் அங்கு நின்று கொண்டு ஹெல்மட் போடாதவர்களை வழிமறித்துக் கொண்டிருந்தனர்.
அதில் இருந்த ஒரு பொலிசார் எங்களை வழிமறித்தார். நான் வண்டியை நிறுத்துவதற்குள் அந்த பொலிசார் என் சட்டையைப் பிடித்து இழுத்தார். இதனால் நான் அவரிடம் ஏன் ஒரு குற்றவாளியைப் போன்று நடத்துகிறீர்கள் என்று கேட்டேன்.

இதனைத் தொடர்ந்து பொலிசாருக்கும் எனக்கும் வாக்குவாதம் நடந்தது. அதைத் தொடர்ந்து கால்மணி நேரம் பொலிசார் எங்களை அங்கேயே நிறுத்தி வைத்திருந்தார்.
அதன் பின் என்னிடம் சாவியைக் கொடுத்துவிட்டு, மற்ற வண்டிகளைப் பிடிக்கும் வேலைகளைச் செய்ததால், உஷாவை ரோட்டி நிற்கவைப்பது சரியாக இல்லை, என்பதால் நாங்கள் அங்கிருந்து கிளம்பி வந்தோம்.
சிறிது தூரம் சென்ற்போது உஷா, பின்னால் ஒரு பொலிசார் விரட்டிவருவதாகக் கூறினார். அவள் சொல்லி முடிப்பதற்குள், வேகமாக அந்தப் பொலிசார் கோபமாக எட்டி உதைத்தார்.
அடுத்து வண்டி நிறுத்துவதற்குள் மீண்டும் உதைத்தார். இதில் நிலைதடுமாறிய நாங்கள், வண்டியோடு கீழே விழுந்தோம்.
அதில் இருவருக்கும் பலத்த அடி. உஷாவுக்கு தலையில் அடி. அடுத்து ஆம்புலன்ஸ் வர வைத்து, அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் எங்களை அனுப்பி வைத்தார்கள்.
துவாக்குடி மருத்துவமனையில் எனக்கு சிகிச்சையளித்தபோதுதான், உஷா இறந்துவிட்டார் என்று கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அந்தப் பொலிசாருக்கும் குடும்பம் இருக்கும். என் குடும்பத்தை இப்படி அழிச்சிட்டாரே என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
என் குடும்பத்தையே இப்படி அழிச்சுட்டாரே: கர்ப்பிணி மனைவியை இழந்த கணவர் கண்ணீர் - Reviewed by Author on March 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.