மன்னாரில் கடையடைப்பு போராட்டம்-படம்
முஸ்ஸீம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல் சம்பவங்களை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை (9) மன்னாரில் உள்ள முஸ்ஸீம்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
மன்னார் பஸார் பகுதி மற்றும் ஏனைய இடங்களில் உள்ள மூஸ்ஸீம்களின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
இதே வேளை தமிழர்களின் வர்த்தக நிலையங்களும் அதிக அளவில் மூடப்பட்டுள்ளது.
மேலும் மன்னாரில் உள்ள முஸ்ஸீம்களின் பள்ளி வாசல்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அரச தனியார் போக்கு வரத்துச் சேவைகள் வழமை போல் இடம் பெற்று வருவதோடு,பாடசாலைகள் மற்றும் அரச தனியார் திணைக்களங்களின் செயற்பாடுகளும் வழமை போல் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் கடையடைப்பு போராட்டம்-படம்
Reviewed by Author
on
March 09, 2018
Rating:

No comments:
Post a Comment