மலர்களிலேயே சுத்தமானது தாமரை -
ஜேர்மனிய விஞ்ஞானிகள் தாமரை அப்பழுக்கற்றது என நிரூபித்துள்ளனர்.
தாமை இலை வட்டவடிவமானது, இலையில் விழும் நீர்த்துளிகள் உருண்டோடி விடும். தாமரை இலையில் மெழுகுபோன்ற பொருள் கலந்திருப்பதுதான் அதற்கு காரணம்.
இந்த மெழுகு பொருளானது நீரைம் தாமரை இலையில் ஒட்டவிடாது தடுத்து உருண்டோட செய்கின்றது. அதேவேளையில் இலையின் ஈரப்பதத்தையும் காக்கின்றது.
மெழுகு எப்பொழுதுமே தண்ணீரின் எதிரி.
இலையில் தூசு படிந்தால் அதை சுத்தம் செய்ய நீர்த்துளிகள் உதவுகின்றன. இலையில் ஒட்டியிருக்கும் தூசு, நீர்திவலையுடன் கலந்து உருண்டோடுவதை லோட்டஸ் எபெக்ட் ( lottas effect) என்கின்றனர் விஞ்ஞானிகள்.
தாமரையின் அறிவியல் பெயர் நெலும்போ நூசிபேரா (Nelumbo nucifera) என்பதாகும்.
தாமரைப்பூ பண்டைய இந்தியா மற்றும் எகிப்து நாடுகளில் புனிதமானதாகப் போற்றப்பட்டதுடன், வழிபாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டது.
தாமரையின், பூக்கள், இதழ்கள் என்பவை அக்காலச் சமயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகின்றது.
பண்டைய இந்தியப் புராணங்களிலும் பழங்கால இந்திய மருந்து வகைகளிலும் தாமரை முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
மலர்களிலேயே சுத்தமானது தாமரை -
Reviewed by Author
on
March 25, 2018
Rating:

No comments:
Post a Comment