கவனித்து செயற்படுவோம்.....மக்களே....
மழை அப்பப்போது தூறிவிட்டுச்செல்லுகின்றது. தற்போது வறட்ச்சிக்கு பின் பயிர்ச்செய்கை செய்து அறுவடை நடைபெற்று வருகின்றது.
பலர் அறுவடை செய்து.
முடித்துவிட்டார்கள் பின்பு அறுவடை செய்யப்பட்ட வயல்பகுதியை தீ மூட்டி எரிப்பது வழக்கம் தற்போது இவ்வாறான செயற்பாடுகள் வயல்காணிகள் உள்ள இடங்களில் அதிகமாக செய்யப்பட்டு வருகின்றது பொதுவான விடையம் தான்.
மன்னார் மாவட்டத்தினை பொறுத்தவரையில் பெரும்பாலான வயல்விளை நிலங்கள் பிரதான வீதிக்கு அருகில் இருபக்கமும் உள்ளது யாவருக்கும் தெரியும்.
இங்கே பிரச்சினை என்னவென்றால் அறுவடைக்கு பின் தீ மூட்டப்படுகின்றபோது ஏற்படுகின்ற தீயின் வெப்பமும் அதனால் ஏற்படும் பாரியபுகை மூட்டமும் மூச்சுத்திணறல் மற்றும் கண்ணெரிவு காரணமாக பிரதான வீதிகளினால் செல்லுவோரின் போக்குவரத்தினை மிகவும் பாதிக்கின்றதுடன் விபத்துக்கள் நடைபெறுவதற்கும் காரணமாய் அமைகின்றது.
இது மட்டுமல்ல.........
- வீதிகளில் குப்பைகளை கொளுத்துபவர்கள்
- கால் நடைகள் வளர்ப்போராலும் மேய்ச்சலுக்கும் செல்லும் கால்நடைகள் பெரும் கூட்டமாக பிரதான வீதிகளை கடப்பதாலும் விபத்துகள் ஏற்படுகின்றது.
- பிரதான வீதிகளில் இன்னும் மின்குமிழ்கள் ஒளியுடையவை பொருத்தப்படவில்லை
பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன் கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றது.
தகுந்த முறையில் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முனைவோம்.விரைவாக யாவரும்......

கவனித்து செயற்படுவோம்.....மக்களே....
Reviewed by Author
on
March 04, 2018
Rating:

No comments:
Post a Comment