சர்வதேசத்திடம் நீதி கோரி வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.....
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்க வேண்டும் என வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டுள்ளது. இத்தீர்மானமானது மாகாணசபையின் அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவுடன் ஏகமன தாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையை ஒரு சர்வதேச நீதிப்பொறி முறை முன் முற்படுத்துமாறு ஐ.நா மனித உரிமை பேரவையிடம் கோரும் தீர்மானமொன்று வடக்கு மாகாண சபையில் அனைத்து உறு ப்பினர்களின் ஆதரவுகளுடனும் நிறை வேற்றப்பட்டு ஐ.நா மனிதவுரிமை ஆணை யாளருக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே சிவ ஞானத்தின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற மாகாண சபையின் அமர்வில் குறித்த தீர்மா னம் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தி னால் கொண்டுவரப்பட்டது.
2015 செப்ரெம்பரில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுக ளின் போது இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக் கூறுதல், மனித உரிமைகள் முத லியவற்றை ஊக்கப்படுத்தல் என்ற தலைப்பி லான தீர்மானம் இலக்கம் 30ஃ1 இனுடைய இணை அனுசரணையாகவும் அதில் ஒப்ப மிட்டதுமாக இலங்கை இருந்ததையும் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனித நேயச் சட்டங்களையும் மீறுதல் மற்றும் துஷ் பிரயோகம் செய்தது தொடர்பான குற்றச்சாட்டு க்களை விசாரிப்பதற்கென வெளிநாட்டு நீதிப திகள், சட்டவாளர்கள், வழக்கு தொடுநர்கள், விசாரணையாளர்கள் அடங்கலான பக்கச் சார்பற்ற சட்ட நெறி பொறியமைப்பொன்றை ஏற்படுத்துவதற்கான கடப்பாடு நிலைக்குள் அது தன்னை உட்படுத்திக் கொண்டதையும் நினைவு கூர்ந்தது.
30ஃ1 இலக்கத் தீர்மானத்தை நடை முறை ப்படுத்துவது தொடர்பாக எந்த ஒரு அர்த்த முள்ள நடவடிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் எடுக்க தவறி விட்டிருப்பதோடு அரசினுடைய ஜனாதிபதி பிரதமர் மற்றும் அரசாங்க முதுநிலை உறுப்பினர்கள் தாங் கள் இந்த தீர்மானத்தை முழுமையாக நடை முறைப்படுத்தப் போவதில்லை என்று தெளி வாகவும் ஆணித்தரமாகவும் வெளிப்படுத்தி இருப்பதையும் அழுத்தமாக தெரிவிப்பதோடு.
ஒரு சமத்துவமான அரசியல் தீர்வை கண்டு கொள்வதற்கான எந்த ஒரு மனப்பூர் வமான நடவடிக்கையை மேற்கொள்வதிலி ருந்தும் தவறியிருப்பது மட்டுமல்லாமல் சிங் கள அரசினுடைய ஒடுக்கு முறை மனப் போக்கை எடுத்துக்காட்டும் விதத்திலே தமிழ் மக்கள் உள்ளிட்ட பௌத்தர்கள் அல்லாத மக் களை பௌத்தத்திற்கு முதலிடம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை இப் போதும் வலியுறுத்துவதையும் அக்கறையு டன் கவனத்தில் கொண்டு,
இலங்கையின் வட மாகாண சபையா னது பின்வருமாறு தீர்மானம் எடுக்கிறது,
இலங்கையானது தானே ஏற்றுக்கொண்ட கடப்பாடுகளை நடைமுறைப்படுத்த மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மான 30ஃ1 இனை நடைமுறைப்படுத்த இயலாமல் அல்லது விரும்பாமல், இருப்ப தையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் 2018ஆம் ஆண்டு ஜன வரி 25ஆம் திகதிய வருடாந்த அறிக்கையின் முடிவுரை ஏ:52 கூறுவதான இலங்கை யின் பொறுப்புக் கூறுதல் மற்றும் நல்லிண க்கம் முதலியவற்றின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் திருப்புமுனை வகிபாகத்தை மேற்கொள்ளும்படி மனித உரிமை ஆணை யகத்தை உயர்ஸ்தானிகர் தூண்டுகிறார் அத்தோடு பொறுப்புக் கூறுதலின் வளர்ச்சி க்கு துணை நிற்கக் கூடியவையான உலக ளாவிய விசாரணை அதிகாரத்தை பிரயோ கித்தல் உள்ளிட்ட வேறு வழிகளை ஆரா யும்படி உறுப்பு நாடுகளை அழைக்கிறது என்பதையும் கருத்திலெடுத்துள்ள இந்த சபையானது இந்த பிரச்சினையை ஐக்கிய நாடுகளின் தலைமையிலான ஒரு சர்வதேச சட்ட நெறிப் பொறியமைப்புக்கு முற்படுத்து மாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளைக் கேட்டுக் கொள்கிறது.
தமிழ் மக்கள் இலங்கையில் இணைந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமது மரபு வழி தாயகத்தை கொண்டிருக்கும் ஒரு மக் கள் இனம் என்பதையும், அவர்கள் சுயநிர் ணய உரிமை கொண்டவர்கள் என்பதை யும் கண்டுணர்ந்திருக்கும் இந்த சபையா னது, ஒரு அரசியல் தீர்வுக்கான இணக்க நடுவராக செயற்படும்படி சர்வதேச சமூகத் தைக் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியாவைக் கேட்டுக் கொள்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-VALAMPURI-
சர்வதேசத்திடம் நீதி கோரி வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.....
Reviewed by Author
on
March 01, 2018
Rating:

No comments:
Post a Comment