சர்க்கரை நோயாளிகளே நீங்கள் சாப்பிட வேண்டிய பழங்கள் இதோ -
உடலில் கொழுப்பு சேரச் சேர, கொழுப்புத் திசுக்களில் உள்ள செல்கள், இன்சுலின் செயல்பாட்டுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை; இன்சுலினை எதிர்க்கின்றன. இன்சுலின் செல்களுக்குள் நுழைவதைத் தடுக்கின்றன.
மாவுச்சத்துள்ள உணவு வகைகளையும் கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகளையும் இனிப்புப் பண்டங்களையும் குறைத்துச் சாப்பிட வேண்டும்.
எண்ணெயில் பொரித்த, வறுத்த பண்டங்களையும். பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும்.
நார்ச்சத்து நிறைந்த காய்கறி, பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
ஆப்பிள்
ஆப்பிளில் பைபர் அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம். வயிற்றை நிரப்புவதுடன் சர்க்கரை அளவில் மாற்றம் இல்லாமலும் இருக்கும்.பப்பாளி
பப்பாளியில் குறைவான குளுக்கோசும், அதிகப்படியான மினரல்கள் மற்றும் விட்டமின்கள் உள்ளது.இன்சுலின் சுரப்பையும் சீர்ப்படுத்தி விடுவதால் சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம், இதேபோன்று பீச் பழத்திலும் குறைவான குளுக்கோஸ் அதிகப்படியான மினரல்கள் உள்ளது.
நெல்லிக்காய்
நெல்லிக்காயில் உள்ள பாலிஃபீனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மட்டுமல்லாது இன்சுலின் சுரப்பையும் கட்டுப்படுத்துகிறது.பெர்ரீ பழங்கள்
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்திடும் அந்தோசயனின் சத்து பெர்ரீ பழங்களில் அதிகம் நிறைந்திருப்பதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் அமிலம் நிரம்பிய ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்றவற்றில் ஆன்டி ஆக்ஸிடண்டுகள் உள்ளதால் சர்க்கரை அளவை சீராக்குகிறது.
சர்க்கரை நோயாளிகளே நீங்கள் சாப்பிட வேண்டிய பழங்கள் இதோ -
Reviewed by Author
on
March 26, 2018
Rating:

No comments:
Post a Comment