சாதாரண தர பரீட்சையில் 100 வீத சித்தியெய்தியுள்ள வவுனியா மாணவர்கள் -
வவுனியா வெளிக்குளம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப்பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் 100 வீதம் சித்தியெய்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடத்திற்கான சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் கடந்த வாரம் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், வவுனியா வெளிக்குளம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தில் கல்வி கற்று பரீட்சைக்குத்தோற்றிய மாணவர்கள் 100 வீத சித்தியைப்பெற்றுள்ளனர்.
இது தொடர்பில் பாடசாலை அதிபர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில்,
அண்மையில் வெளியாகிய கா.பொத சாதாரண தரப்பரீட்சை முடிவுகளுக்கு அமைய கணிதம் உட்பட எட்டுப்பாடங்களில் மாணவர்கள் 100 வீத சித்தியைப்பெற்றுள்ளனர்.
தமிழ் ,கணிதம், சைவசமயம், கிறிஸ்தவ சமயம், வணிகக்கல்வி, சித்திரம், நடனம், சுகாதாரம் போன்ற பாடங்களில் 100 வீத சித்தி கிடைக்கப்பெற்றுள்ளது.
வடமாகாணத்தில் கணித பாடத்தில் 100 வீத சித்திபெற்ற இரண்டு பாடசாலைகளில் இப்பாடசாலை ஒரு பாடசாலையாகக் காணப்படுவதுடன், பரீட்சைக்குத்தோற்றிய 78 வீத மாணவர்கள் கபொ.த.உயர்தரத்திற்கு தகுதிபெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சாதாரண தர பரீட்சையில் 100 வீத சித்தியெய்தியுள்ள வவுனியா மாணவர்கள் -
Reviewed by Author
on
April 04, 2018
Rating:

No comments:
Post a Comment