O/L பரீட்சையில் முதலிடம் பெற்ற யாழ் மாணவிக்கு ஆளுநர் கௌரவம்! -
பாடசாலை அதிபர் மற்றும் பெற்றோர் சகிதம் யாழ் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்திற்கு நேற்று (03) மாலை 4.00 மணியளவில் வருகை தந்த மாணவி மிருதி சுரேஸ்குமாருக்கு பரிசில் பொதியினை வழங்கி ஆளுநர் கௌரவித்தார்.
யாழ் குடாநாட்டு மாணவர்கள் அண்மைக்காலமாக கல்வியில் முன்னேற்றம் கண்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த ஆளுநர், மிருதி சுரேஸ்குமார் மேலும் கல்வியில் முன்னேற்றம் கண்டு இந்த நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்.
O/L பரீட்சையில் முதலிடம் பெற்ற யாழ் மாணவிக்கு ஆளுநர் கௌரவம்! -
Reviewed by Author
on
April 04, 2018
Rating:

No comments:
Post a Comment