இந்துக்கள் எதற்காக விபூதி அணிகிறார்கள்? -
நமது கலாச்சாரத்தின் படி நெற்றியில் அணியப்படும் திருநீறு, குங்குமம், சந்தனம் போன்றவற்றால் உடலுக்கும் மனதிற்கும் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், அவற்றை அணிய நம் மக்கள் விரும்புவது இல்லை.
அவற்றை நாம் அணிந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என பார்க்கலாம்.
திருநீற்றில் உள்ள மகத்துவங்கள்:
அறுகம் புல்லையும் மாட்டு சாணத்தையும் கலந்து செயப்படும் திருநீறானது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது.
எம்மை அறியாமலே சில அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது.அதனால்தான் இந்துகளிடம் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது.
மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடவேண்டும் என கூறிஇருக்கின்றார்கள்.
தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்போம், புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடும், அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில்நீர்த்தன்மையை உறிஞ்சவல்லதிருநீற்றை அணிகின்றான்.
அதோடு நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும்சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில்ஒருவகை உணர்வு தோன்றும்.
அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடுதோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் நெற்றில் இடவேண்டும் என எம்முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.
அதேபோல குங்குமமானது,
மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவை மூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும். மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்தது நெற்றிக்கண் மனிதன் அதிகமாக சிந்திக்கும் போது சிந்தனை நரம்புகள் சூடேறி நெற்றி வலி தலைபாரம், தலைச்சுற்றல் ஏற்படும். மன உளைச்சல் ஏற்பட்டுத் தன் நிலை மறக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி பல விரும்பத் தாகத விளைவுகள் ஏற்படும். ஆகவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும்.
சந்தனம், திருநீறு, குங்குமம் இவைகளுக்குக் குளிர்ச்சியூட்டும் தன்மை உண்டு. எனவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சந்தனம் பூசி, சந்தனம் காயாமல் இருக்க குங்குமம் இடுகிறோம்.இவற்றைத் தரித்தால் புத்துணர்வும், புதுத் தெளிவும், புதிய சிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும்.
நம் முன்னோர் மனித இனத்தின் நன்மைக்காகத்தான் பல்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளனர். இவற்றினை நாம் அணிவதால் எந்த கடவுளுக்கும் நன்மை விளையாது, மாறாக அணியும் மனிதர்களுக்குத்தான் நன்மை ஏற்படும்.
எனவே எந்தவித வெட்கமுமின்றி நம்மைக் காக்கும் விபூதி, சந்தனம், குங்குமத்தை அணிவோம்.
இந்துக்கள் எதற்காக விபூதி அணிகிறார்கள்? -
Reviewed by Author
on
April 03, 2018
Rating:
Reviewed by Author
on
April 03, 2018
Rating:


No comments:
Post a Comment