மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு இடம் பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் தர்க்கம்-லீக்கிற்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 08-04-2018 மாலை இரண்டு அணிகளுக்கு இடையில் இடம் பெற்ற உதைப்பந்தாட்ட போடியில் ஏற்பட்ட தர்க்க நிலையின் போது மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக் பிரதி நிதிகள் எவ்வித சமரசமும் செய்யாத நிலையில் மைதானத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக மன்னார் பனங்கட்டிக்கொட்டு புனித சூசையப்பர் விளையாட்டுக்கழகத்தினர் விசனம் தெரிவித்துள்ளனர்.
-மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் வீரர் ஒருவரின் நினைவாக உதைப்பந்தாட்ட போட்டி கடந்த இரு தினங்களாக இடம் பெற்று வந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(8) மாலை இறுதி போட்டி இரு அணிகளுக்கு இடையில் இடம் பெற்ற போது மைதானத்தில் தர்க்க நிலை ஏற்பட்டது.
எனினும் குறித்த தர்க்க நிலையை சமரசம் செய்யாது மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக் பிரதி நிதிகள் மைதானத்தில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் மன்னார் மாவட்ட லீக் தண்ணிஷையாக முடிவுகளை எடுப்பதனால் திறமையான பல வீரர்கள் நசுக்க படுவதாகவும் மன்னார் பனங்கட்டிக்கொட்டு புனித சூசையப்பர் விளையாட்டுக்கழகத்தினர் விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் மைதானத்தில் இடம் பெறுகின்ற சிறிய சிறிய பிரச்சினைகளுக்கு லீக் தலையிட்டு சமாதனப்படுத்துகின்றனர்.
ஆனால் நேற்றைய தினம் (8) இடம் பெற்ற குறித்த பிரச்சினையின் போது மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக் பிரதி நிதிகள் மைதானத்தில் இருந்து ஓடி விட்டதாக மன்னார் பனங்கட்டிக்கொட்டு புனித சூசையப்பர் விளையாட்டுக்கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கினால் விளையாட்டு கழகங்களுக்கு ஏற்படுகின்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து லீக்கிற்கு எதிராக கையெழுத்து பெற்று மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம்.என மன்னார் பனங்கட்டிக்கொட்டு புனித சூசையப்பர் விளையாட்டுக்கழகத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
-மன்னார் நிருபர்-
மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு இடம் பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் தர்க்கம்-லீக்கிற்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
Reviewed by Author
on
April 09, 2018
Rating:
Reviewed by Author
on
April 09, 2018
Rating:





No comments:
Post a Comment