அமெரிக்காவில் காணாமல் போன இந்திய குடும்பம்: ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் -
கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்டா கிளாரிடாவில் சந்தீப் தொட்டப்பிள்ளி(41), அவரின் மனைவி சவுமியா(38), மகள் சாச்சி(9), மகன் சித்தாந்த்(12) ஆகியோர் வசித்து வந்த நிலையில், அண்மையில் காணாமல் போயிருந்தனர்.
இது குறித்த அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், தற்போது சிறுவனது சடலம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏனைய மூவரினதும் உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது சிறுவனது உடலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்ட்லேண்ட், ஓரிகன் ஆகிய இடங்களுக்கு காரில் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது இவர்கள் காணாமல் போயிருந்தனர்.
சடலங்கள், பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் காணாமல் போன இந்திய குடும்பம்: ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் -
Reviewed by Author
on
April 19, 2018
Rating:

No comments:
Post a Comment