ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார் விராட் கோஹ்லி -
11-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை- பெங்களூர் அணிகள் மோதிய நிலையில் மும்பை அணி வெற்றி பெற்றது.
பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தனி ஆளாக போராடி 92 ஓட்டங்கள் குவித்தும் அந்த அணி தோல்வியடைந்தது.
இந்த 92 ஓட்டங்களையும் சேர்த்து கோஹ்லி மொத்தமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் 4619 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள கோஹ்லி 4558 ஓட்டங்கள் எடுத்த சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்த பட்டியலில் ரெய்னா இரண்டாமிடத்திலும், ரோகித் சர்மா மூன்றாமிடத்திலும், கவுதம் கம்பீர் நான்காம் இடத்திலும், டேவிட் வார்னர் ஐந்தாமிடத்திலும் உள்ளனர்.
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார் விராட் கோஹ்லி -
Reviewed by Author
on
April 19, 2018
Rating:
Reviewed by Author
on
April 19, 2018
Rating:


No comments:
Post a Comment