அண்மைய செய்திகள்

recent
-

காவிரி விவகாரம்: போராட்டகளமாக மாறும் தமிழகம் -


காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மற்றும் இறுதி தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றம் இன்று விளக்கம் அளித்துள்ளது.
அந்த விளக்கத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கூறவில்லை என்றும் மாறாக ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தமாக காவிரி நிர்வாக குழுவை அமைக்க பரிந்துரைத்ததாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக அரசு தொடந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஏப்ரல் 9 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த 30 ஆம் திகதி முதல் காவிரி மேலாண்மை வாரியத்திற்காக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் நீதிபதிகளின் இந்த கருத்து மேலும் போராட்ட சூல்நிலையை அதிகரித்துள்ளது.
இதனை தொடந்து நாளை(ஏப்.3) வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக முழு கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
அளும் அதிமுக சார்பாகவும் நாளை மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதேபோல நேற்று(ஏப்.1) நடைபெற்ற திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை ஏப்ரல் 5 ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும் அக்கூட்டத்தில் தொடந்து திமுக போராட்டத்தில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று சென்னையின் பல்வேறு இடங்களில் தடையை மீறி திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோல பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் சென்னை முழுவதும் ஆங்காங்கே ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

மே 17 இயக்கத்தினர் சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் இயங்கி வரும் சாஸ்திரிபவனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்து சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக 18 ஆம் நாளாக இன்றும் அவையை முடக்கி கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் தமிழகமே ஒரு போராட்டகளமாக மாறியுள்ளது.
காவிரி விவகாரம்: போராட்டகளமாக மாறும் தமிழகம் - Reviewed by Author on April 03, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.