அணு ஆயுத விவகாரம்: வடகொரியா முக்கிய அறிவிப்பு -
வடகொரிய தலைவர் கிம் ஜாங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகிய இருவரும் முதன்முறையாக சந்தித்து பேசும் வரலாற்று நிகழ்வு அடுத்த மாதம் நடக்கவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் குறித்து இரு நாட்டு உளவு அதிகாரிகளும் மூன்றாவது நாடு ஒன்றில் பலமுறை சந்தித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பின் போது, தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை குறைப்பது குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக வடகொரியா அமெரிக்காவிடம் தெரிவித்து உள்ளது.
இந்த தகவலை தென்கொரியா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சங் ஈய்-யங் தெரிவித்துள்ளார்.
வடகொரியா தனது விருப்பத்தை அமெரிக்காவிடம் நேரடியாக சொல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அணு ஆயுத விவகாரம்: வடகொரியா முக்கிய அறிவிப்பு -
Reviewed by Author
on
April 10, 2018
Rating:

No comments:
Post a Comment