வயிற்று வலிக்காக சிகிச்சைக்கு சென்ற இளம்பெண்: உயிருடன் பதப்படுத்திய மருத்துவர்கள் -
ரஷ்யாவில் பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் ஒருவருக்கு உப்பு கரைசலுக்கு பதிலாக உடலை பதப்படுத்தும் திராவகத்தை மருத்துவர்கள் தவறுதலாக அளித்துள்ளனர்.
இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட குறித்த இளம்பெண் கோமா நிலைக்கு தள்ளப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார்.
வயிற்று வலியால் கடுமையாக பாதிக்கப்பட்டு உறவினர்களால் குறித்த மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டார் 27 வயது பெண் Ekaterina Fedyaeva.
குறித்த பெண்மணியை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்து அதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டனர்.
சம்பவத்தன்று அறுவை சிகிச்சையின்போது உப்பு கரைசலுக்கு பதிலாக formaldehyde எனப்படும் சடலங்களை பதப்படுத்தும் திராவகத்தை தவறுதலாக அளித்துள்ளனர்.
அறுவை சிகிச்சை முடிந்து அறைக்கு கொண்டு வரப்பட்ட குறித்த பெண்ணுக்கு உடல் நடுக்கம் ஏற்பட்டு அது நீடித்த வண்ணம் இருந்துள்ளது.
மட்டுமின்றி வயிற்று வலி அதிகரித்தும், வாந்தி எடுக்கவும் செய்துள்ளார். இருப்பினும் எந்த மருத்துவர்களும் வந்து பார்வையிடவில்லை என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
உதவி கேட்டு பல முறை கெஞ்சிய பின்னர் பார்வையிட வந்த மருத்துவர் ஒருவர், வீட்டுக்கு அழைத்து சென்று கோழியை சமைத்து சூப்பு வைத்து கொடுங்கள் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே அறுவை சிகிச்சை முடிந்த 14 மணி நேரத்திற்கு பின்னர் Ekaterina பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் கொலை குற்றத்திற்காக விசாரணை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
வயிற்று வலிக்காக சிகிச்சைக்கு சென்ற இளம்பெண்: உயிருடன் பதப்படுத்திய மருத்துவர்கள் -
Reviewed by Author
on
April 09, 2018
Rating:
No comments:
Post a Comment