சிரியா அரசுப்படைகள் மீண்டும் ரசாயன தாக்குதல்: கொத்தாக பலியான சிறுவர்கள்
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டுக் கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு ராணுவத்தினை பயன்படுத்தி வருகிறது. உள்நாட்டுப் போர் சூழ்ந்த சிரியாவில் ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகளும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்காரணமாக இதுவரை அங்கு பல லட்சம் பொதுமக்களும், சிறார்களும் வன்முறைக்குப் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், டமாஸ்கஸ் அருகே கிழக்கு கவுட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள டூமா நகரைக் கைப்பற்ற சிரியா படைகள் உச்சக்கட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அங்குள்ள பொதுமக்களில் பெரும்பான்மையானவர்கள் வெளியேறி விட்டனர்.
இதனிடையே, கிழக்கு கவுட்டா பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையிலான ரசாயன தாக்குதலில் 80 பேர் பலியாகியுள்ளதாக அங்கு நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களும் , மீட்பு படையினரும் தெரிவித்துள்ளனர்.
ஹெலிகொப்டர் மூலமாக சரீன் என்ற நச்சு ரசாயன பொருள் அடங்கிய வெடிகுண்டு வீசப்பட்டதாக, அமெரிக்க தொண்டு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
குறித்த தாக்குதலில் பலி எண்ணிக்கை 100க்கும் மேல் இருக்கும் என்றும், ஆனால் இரவு நேரம் மற்றும் தொடர் குண்டு வீச்சு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த ரசாயன தாக்குதலுக்கு சிரியா அரசு மிகப்பெரிய விலையை தர வேண்டி இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதை சிரியா அரசு மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிரியா அரசுப்படைகள் மீண்டும் ரசாயன தாக்குதல்: கொத்தாக பலியான சிறுவர்கள்
Reviewed by Author
on
April 09, 2018
Rating:

No comments:
Post a Comment