அண்மைய செய்திகள்

recent
-

பிறந்து ஆறு மாதமே ஆன கைக்குழந்தையை தீயில் வீசி கொன்ற தாய் !


ஒடிசா மாநிலத்தில் குடும்ப தகராறு காரணமாக பெற்ற குழந்தையை தாயே தீயில் வீசி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் கத்தாக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மஞ்குலி பின்குவா. இவர் சுனா பின்குவா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில், நேற்று கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சுனா வீட்டில் இருந்த அனைத்து துணிகளையும் தீவைத்து எரித்தார்.
பின்னர் தனது 6 மாதக்குழந்தையையும் தீயில் வீசினார். இதில் படுகாயமடைந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர். 90 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டதால் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

பெற்ற தாயே குழந்தையை கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பொலிசார் வழகுப்பதிவு செய்தனர்.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது சுனா குழந்தை தீயில் கருவதை ஓரமாக உட்கார்ந்து வேடிக்கை பார்க்கதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்து ஆறு மாதமே ஆன கைக்குழந்தையை தீயில் வீசி கொன்ற தாய் ! Reviewed by Author on April 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.