தென்னிலங்கை வைரஸ் காய்ச்சலுக்கு 13 பேர் பலி! 600 பேர் பாதிப்பு -
தென்னிலங்கையில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக சிறு குழந்தைகள் உள்ளிட்ட 13 பேர் பலியாகி 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஜீ. விஜேசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் 12 பேர் சிறுவர்கள் என்றும் மேலதிகமாக ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் வைரஸ் காய்ச்சலினால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் தென் மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் பரவி வரும் குறித்த வைரஸ் காய்ச்சலின் காரணமாக சுகாதாரத்துறையினர் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
தற்போதைக்கு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை, மாத்தறை பொது வைத்தியசாலை, கம்புறுப்பிட்டிய மருத்துவமனை, தங்காலை, வலஸ்முல்லை மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளில் வைரஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
தென்னிலங்கை வைரஸ் காய்ச்சலுக்கு 13 பேர் பலி! 600 பேர் பாதிப்பு -
Reviewed by Author
on
May 21, 2018
Rating:
Reviewed by Author
on
May 21, 2018
Rating:


No comments:
Post a Comment