அண்மைய செய்திகள்

recent
-

பதினான்கு மாவட்டங்களில் ஒருலட்சம் பேர் பாதிப்பு! -


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை சீற்றங்கள் காரணமாக தற்போதைக்கு 14 மாவட்டங்களில் ஒரு லட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைக்கு கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் பிரகாரம் சுமார் இருபதினாயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இயற்கைச் சீற்றம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்..

மின்னல் தாக்குதல், நீரில் மூழ்கி மரணம், மரம் உடைந்து வீழ்தல் போன்ற அனர்த்தங்கள் காரணமாக இதுவரை பதினொரு பேர் உயிரிழந்துள்ளனர்.
கண்டி, காலி, இரத்தினபுரி, பதுளை, நுவரெலியா, கேகாலை, களுத்துறை, கம்பஹா, கொழும்பு, குருநாகல், புத்தளம், மாத்தளை, மொனராகலை, மாத்தறை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களே இயற்கைச் சீற்றங்கள் காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இதிலும் ஆகக்கூடுதலான பாதிப்பை இரத்தினபுரி மாவட்டம் எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பதினான்கு மாவட்டங்களில் ஒருலட்சம் பேர் பாதிப்பு! - Reviewed by Author on May 24, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.