மரணம் வேண்டும்: சுவிட்சர்லாந்துக்கு செல்லும் புகழ்பெற்ற விஞ்ஞானி -
டேவிட் குடால், தனது வாழ்க்கைத்தரம் குறைந்துகொண்டே வருவதால், Baselஇல் உள்ள இறப்பதற்கு உதவும் நிறுவனம் ஒன்றிடம் அப்பாயிண்ட்மெண்ட் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
நான் மகிழ்ச்சியாக இல்லை, நான் இறக்க விரும்புகிறேன், நான் இறப்பதைக் குறித்து எனக்கு கவலையில்லை, ஆனால் இறப்பை தடுப்பது எனக்கு கவலையளிக்கிறது என்று கூறியுள்ளார் டேவிட்.
என்னைப் போன்ற வயதான ஒருவருக்கு இறப்பை முடிவு செய்வதற்கான உரிமை உட்பட முழுக் குடியுரிமையும் வழங்கப்படவேண்டுமென விரும்புகிறேன் என்றும்அவர் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு அவரது பல்கலைக்கழகம் கட்டாயப்படுத்தி அவரை அவரது பதவியிலிருந்து நீக்க முற்பட்டதையடுத்து அவர் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியானார்.
102 வயதான அவர் பணி புரிவதற்கு தகுதியற்றவர் என்று கூறி Perthல்லுள்ள Edith Cowan University அவரை வேலையை விட்டு அகற்ற முயன்றது.
இதற்கு உலகம் முழுவதிலுமுள்ள விஞ்ஞானிகள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து அது தனது முடிவிலிருந்து பின்வாங்கியது.
ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ள டேவிட் தொடர்ந்து ஜர்னல்களை திருத்தி வருகிறார்.
அவுஸ்திரேலியாவில் இறப்புக்கு உதவுதல் சட்ட விரோதம் என்பதால், டேவிட் சுவிட்சர்லாந்துக்கு செல்லவிருக்கிறார்.
அவர் சுவிட்சர்லாந்து செல்வதற்கான செலவுகளுக்காக Exit International என்னும் அமைப்பு நிதி திரட்டி வருகிறது.
இதுவரை 17,000 அவுஸ்திரேலிய டொலர்கள் சேர்ந்துள்ளது. ஆனால் இதுவரை டேவிடுக்கு எந்த உடல் நலக் குறைவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மரணம் வேண்டும்: சுவிட்சர்லாந்துக்கு செல்லும் புகழ்பெற்ற விஞ்ஞானி -
Reviewed by Author
on
May 01, 2018
Rating:
No comments:
Post a Comment