ரஜினிகாந்தை கடுமையாக தாக்கி பேசிய பாரதிராஜா -
‘காட்டுப்பய சார் இந்தக் காளி’ எனும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக இயக்குநர் பாரதிராஜா கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், ‘தற்போது வெளியாகும் பெரும்பாலான தலைப்புகளில் எனக்கு உடன்பாடில்லை. ‘’காட்டுப்பய சார் காளி’’ என்பதை விட, ‘’கண்ணியமான காளி’’ என்று வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
‘’காட்டுப்பய காளி’’ என்று வசனம் பேசியவர் தான் இன்று நாட்டை ஆளணும் என்கிறார். நாமே ஒரு படம் கொடுத்து, வசனம் சொல்லிக் கொடுத்து, பாட்டு சொல்லிக் கொடுத்து, ‘ஆ... ஊ..’ன்னு கத்தவிட்டு, கையில் ரெண்டு சங்கிலி கொடுத்து, மக்களை முட்டாளாக்கி... கடைசியில் நாட்டை ஆளணும்னு வந்துடுறீங்க.
ரசிகன் பாவம்.. விவரம் கெட்ட பய. இன்னும் பாருங்க முட்டாளாக்கி வச்சிருக்கோம். பாலாபிஷேகம் பண்ணும்போது, அவர் தடுத்து நிறுத்தியிருக்கணும். ‘கட் அவுட்டுக்கு மாலை கூடாது, கண்ணியமாகப் படம் பார்’ என்று சொல்லியிருந்தால் பேசாமல் இருந்திருப்பார்கள்.
ரசிகனைக் கெளப்பிவிட்டு, Maximum முட்டாளாக்கிட்டு... இப்ப நான் வரேன்’னா அவன் என்ன பண்ணுவான்? ‘வா... வா..’ன்னு தான் கூப்பிடுவான். ரொம்பக் கேவலமான ஒரு சூழ்நிலை. சினிமாவில் இருந்துக்கிட்டு நானே இதெல்லாம் பேச வேண்டியிருக்கு’ என தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் என்று அவரின் பெயரை குறிப்பிடாமல் பாரதிராஜா பேசியிருந்தாலும், அவரை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்தை கடுமையாக தாக்கி பேசிய பாரதிராஜா -
Reviewed by Author
on
May 01, 2018
Rating:
No comments:
Post a Comment