நாம் அனைவரும்மக்களுக்காக ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும்-முசலி பிரதேச சபை உறுப்பினர் P.சகாயநாதன் பீரிஸ்-(படம்)
எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்கு முசலி பிரதேச சபையின் உறுப்பினர்கள் கட்சி,இன,மத வேறுபாடுகள் இன்றி ஒற்றுமையாக எமது மக்களுக்கு சேவை செய்ய ஒன்று பட வேண்டும் என முசலி பிரதேச சபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் பிலிப்பு சகாயநாதன் பீரிஸ் தெரிவித்தார்.
முசலி பிரதேச சபையின் முதல் அமர்வு நேற்று வியாழக்கிழமை(3) மாலை முசலி பிரதேச சபையில் இடம் பெற்றது.
இதன் போது கன்னி உரை நிகழ்த்துகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,,,
முசலி பிரதேச சபை வரலாற்றில் முதல் தடவையாக அரிப்புத்துறையில் இருந்து இரு உறுப்பினர்களை தெரிவு செய்யப்படுவதற்கு முதல் கண் இறைவனுக்கும்,வாக்களித்த மக்களுக்கும்,குறிப்பாக எமது கட்சிக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்கு முசலி பிரதேச சபையின் உறுப்பினர்கள் கட்சி,இன,மத வேறுபாடுகள் இன்றி ஒற்றுமையாக எமது மக்களுக்கு சேவை செய்ய ஒன்று படுவோம்.
குறிப்பாக எமது மக்களின் தேவையான வீதி,தெரு மின் விளக்குகள்,குடி நீர் பிரச்சினைகள்,உள்ளக வீதிகள்,சிறுவர் பூங்கா,விளையாட்டு மைதானம் புனரமைப்பு செய்தல் கழிவுப்பொருட்களை அகற்றுதல் உள்ளிட்ட தேவைகளை அடையாளம் கண்டு மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
முசலி பிரதேச சபையின் தலைவர்,உப தலைவர்,சக உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என கேட்டுக்கொள்ளுகின்றேன்.என தனதுரையில் மேலும் தெரிவித்தார்.
நாம் அனைவரும்மக்களுக்காக ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும்-முசலி பிரதேச சபை உறுப்பினர் P.சகாயநாதன் பீரிஸ்-(படம்)
Reviewed by Author
on
May 04, 2018
Rating:

No comments:
Post a Comment