பிரித்தானியாவில் அதிகரிக்கும் பிஞ்சு குழந்தைகளின் உயிரிழப்பு: வெளியான அதிர்ச்சி தகவல் -
பிரித்தானியாவில் 5 வயதுக்கும் குறைவான பிஞ்சு சிறார்களின் உயிரிழப்பு ஸ்வீடனை விடவும் 50 விழுக்காடு அதிகம் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
இது பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளை விடவும் 25 விழுக்காடு அதிகம் எனவும் தெரியவந்துள்ளது.
தாய்மார்களின் உடல் பருமன், ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் கர்ப்ப காலத்தில் புகைப்பிடித்தல் உள்ளிட்ட காரணிகளே சிறார்களின் உயிரிழப்புக்கு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.
இதனால் உரிய காலகட்டத்திற்கு முன்னரே பிரசவம், உடல் எடை குறைவு மற்றும் குறைபாடுகளுடன் பிறப்பு உள்ளிட்டவையால் உயிரிழப்பு 17 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி மற்றும் சுகாதாரம் உள்ளிட்டவையில் ஸ்வீடன் மற்றும் பிரித்தானியா ஆகிய இரு நாடுகளும் ஒரே அளவில் உள்ளன.
ஆனால் பிரித்தானியாவை பொறுத்தமட்டில் 10,000 சிறார்களில் 29 பேர் உயிரிழப்பதாகவும், ஆனால் ஸ்வீடனில் 19 சிறார்கள் என்ற எண்ணிக்கையிலேயே உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி இதில் 80 விழுக்காடு இறப்பானது குழந்தைகள் தங்கள் முதல் பிறந்த நாளை கொண்டாடும் முன்னரே நடைபெறுவதாகவும் தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் அதிகரிக்கும் பிஞ்சு குழந்தைகளின் உயிரிழப்பு: வெளியான அதிர்ச்சி தகவல் -
Reviewed by Author
on
May 04, 2018
Rating:
No comments:
Post a Comment