மரணத்திலும் இணைபிரியாத சகோதரர்கள் நேற்றைய தினம் மக்கள் திரண்டு அஞ்சலி-படம்)
கடந்த சில நாட்களாக தலைமன்னார் கடற்பகுதியில் வீசிய அதீத காற்று காரணமாக கடலில் பாய்ச்சப்பட்ட வலையை கரை சேர்ப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கடலுக்கு சென்று காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான இரு மீனவர்கள் 5 நாட்களின் பின் புதன் கிழமை(13) மதியம் யாழ் புங்குடுத்தீவு கடற்கரையில் சடலங்களாக மீட்க்கப்பட்டனர்.
கடந்த வெள்ளிக் கிழமை (08) ஆம் திகதி தலைமன்னார் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களான தோ.கிறிஸ்ரின் கூஞ்ஞ (வயது-32) மற்றும் தோ.எமல்ரன் கூஞ்ஞ (வயது 37) ஆகிய இரு சகோதரர்களும் சம்பவம் அன்று காலை கடலில் போடப்பட்ட நண்டு வலையை கரை சேர்ப்பதற்காக படகு ஒன்றில் சென்றுள்ளனர்.
ஏதிர்பாரத விதமாக கடலில் மூழ்கி யாழ் புங்குடுத்தீவு கடற்கரையில் சடலமாக கரை ஒதுங்கினர் பின்னர் வைத்திய பரிசோதனைகளின் பின்னர் மரணம் அடைந்த இரு சகோதரர்களின் சொந்த இடமான தலைமன்னார் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு
அதன் பின்னர் தலை மன்னார் ஆலயத்தில் இறுதி திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு தலைமன்னார் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டன
மரணத்தில் கூட இணைபிரியாமல் இறந்த இரு சகோதர்களுடைய நல்லடக்க நிகழ்வில் ஒட்டு மொத்த தலைமன்னார் சமூகமே ஒன்று திரண்டு கண்ணீர் சிந்தி வழி அனுப்பி வைத்ததை காணக்கூடியதாக இருந்தது.

Reviewed by Author
on
June 15, 2018
Rating:

No comments:
Post a Comment