கிழக்கில் தமிழர் ஒருவரை முதலமைச்சராகக் கொண்டு வரவேண்டும் -
இணைந்த வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் களமிறங்கவில்லை. அதுபோன்று பிரிந்த வடக்கு கிழக்கில்தான் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தேர்தலில் களமிறங்கியிருந்தது. என இந்த கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
வடக்குக் கிழக்குப் பிரிப்புத் தொடர்பில் 2005 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது, அதனால்தான் வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டது.
இப்படிப்பட்ட கட்சியின் மேதினக் கூட்டத்தில்தான் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் கலந்து கொண்டிருந்தார்.
அவ்வாறானால் வடக்கு, கிழக்கு இணைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளதா? அல்லது இவ்வாறு நீதிமன்றம் சென்ற மக்கள் விடுதலை முன்னணிக் கட்சியின் கொண்கையை ஏற்றுக் கொண்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
வட மாகாணத்துடன் கிழக்கு மாகாணத்தை ஒப்பிடும்போது வடக்கு மாகாணத்திலுள்ள சூழல் வேறு, கிழக்கு மாகாணத்திலுள்ள சூழல் வேறு, அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் எல்லோரும் ஒரு குடையின் கீழ் வருகின்ற போது, நல்லதொரு எதிர்காலம் அமையும் என்பதுதான் எமது தலைவரினதும் தூரநோக்கிய சிந்தனையுமாகும்.
இதனை மக்களுக்கும் ஆரம்பத்தில் எடுத்துரைத்துள்ளோம். உண்மையில் கிழக்கு மாகாணத்தில் புத்திஜீவிகள் முன்வர வேண்டும், அவ்வாறு முன்வருகின்றபோதுதான் 63 வருடகாலமாக மிகப்போலித்தனமான பத்திரிகை அரசியலைச் செய்து கொண்டிருக்கின்ற, மக்களுக்கும் எதுவும் செய்யாமல் தங்களது ஆசனங்களைச் சூடாக்கிக் கொண்டிருக்கின்ற சில அரசியல் தலைமைகளின் மறுபக்கம் வெளிவரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கில் தமிழர் ஒருவரை முதலமைச்சராகக் கொண்டு வரவேண்டும் -
Reviewed by Author
on
June 05, 2018
Rating:

No comments:
Post a Comment