பிரபல பாடகி ஜானகிக்கு என்ன ஆச்சு வெளியான உண்மை தகவல்
தமிழ் திரையுலகம் மட்டுமின்றி பல மொழிகளில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் பிரபல பாடகி ஜானகி.
கடந்த 2014-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் இவர் பாடியிருந்த வரி பட்டி தொட்டி எங்கும் பரவியது.
அதன் பின் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடிக்கடி காணப்பட்ட இவர் சமீபகாலமாக எங்கும் காணப்படாததால் இவர் உடல் நலம் குறித்து பல்வேறு வதந்திகள் வந்தன.
இது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடிகர் ரஜினி மற்றும் விஜயின் பி.ஆர். ஓவான ரியாஸ் கே அகமத் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தயவு செய்து ஜானகி அம்மா குறித்து எந்த வதந்திகளையும் பரப்ப வேண்டாம் எனவும், அவர் ஹைதராபாத்தில் நன்றாக இருக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல பாடகி ஜானகிக்கு என்ன ஆச்சு வெளியான உண்மை தகவல்
Reviewed by Author
on
June 26, 2018
Rating:

No comments:
Post a Comment