அமைச்சு பதவியை ஒருபோதும் ஏற்க போவதில்லை! அமைச்சர் மனோவுக்கு சம்பந்தன் பதிலடி -
யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்க வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் அண்மையில் கோரியமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்து பேசிய அவர், “தந்தை செல்வாவின் காலம் தொடக்கம் நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி ரீதியாக எதனையும் ஏற்கவில்லை.
தமிழ் மக்களுக்கு உரியவை கிடைக்கும் வரைக்கும் எமது மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படும் வரைக்கும் அமைச்சுப் பதவிகளை ஏற்பதில் எந்தவிதமான பயனும் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சு பதவியை ஒருபோதும் ஏற்க போவதில்லை! அமைச்சர் மனோவுக்கு சம்பந்தன் பதிலடி -
Reviewed by Author
on
June 26, 2018
Rating:

No comments:
Post a Comment