அண்மைய செய்திகள்

recent
-

அகதிகளிடமிருந்து பிரிக்கப்பட்ட 500 குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு -


அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேற்றத்தை தடுக்கும் வகையில், எல்லைப்பகுதிகளில் அகதிகளிடம் இருந்து பிரிக்கப்பட்ட 522 குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அமெரிக்காவுக்குள் எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில், அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் உத்தரவினை அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை எல்லை வழியாக அத்துமீறி நுழைந்ததாக, 1940 பேர் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதன் பின்னர், ஜூன் 20ஆம் திகதி நிலவரப்படி அவர்களுடன் வந்த 2053 சிறுவர், சிறுமியர்கள் அவர்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு காப்பங்களில் வைக்கப்பட்டனர்.

டிரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு உலகளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அமெரிக்காவிலும் பலர் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, தான் பிறப்பித்த உத்தரவை டிரம்ப் ரத்து செய்தார்.


Reuters

இந்நிலையில், எல்லைப்பகுதிகளில் அகதிகளிடம் இருந்து பிரிக்கப்பட்ட 522 குழந்தைகள், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அமெரிக்க உள்துறை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குடியேற்றம் தொடர்பான காரணங்கள் இன்றி, வேறு எந்த விவகாரத்திற்காகவும் குழந்தைகள் பிரிக்கப்படவில்லை என்றும், அவர்களின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க குடியுரிமைத்துறை அலுவலகத்தில் பிரிக்கப்பட்ட குழந்தைகள், தொலைபேசி மூலம் பெற்றோருடன் தொடர்புகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக தனியாக அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க உள்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


AFP

அகதிகளிடமிருந்து பிரிக்கப்பட்ட 500 குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு - Reviewed by Author on June 26, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.