வாய் துர்நாற்றம், மூட்டு வலிக்கு மருந்தாகும் இலை! -
புளிப்பு மற்றும் துவர்ப்பு சுவைகள் கொண்ட இதன் இலையில், கெரட்டீன், லைக்கோபெனின் மற்றும் விட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதனை சுவைத்து உண்பதாலோ, தேநீராக்கி அருந்துவதாலோ ஈறுகளில் ரத்த கசிவினை தடுத்து வாய்துர்நாற்றத்தை போக்குகிறது.
உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகளை கரைப்பதுடன், நச்சுக்களை வெளியேற்றுகிறது.
நுண்கிருமிகளின் எதிரி
ஒரு பாத்திரத்தில் புளியன் இலை மற்றும் தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும், பழுப்பு நிறம் வந்ததும் நீரை வடிகட்டி கொண்டு வாய் கொப்பளித்தால் நுண்கிருமிகள் அழியும்,சிறுநீரக தொற்று, எரிச்சல் மற்றும் உள்ளுறுப்பு புண்களுக்கு மருந்தாகிறது.
மூட்டு வலிக்கு மருந்து
ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய் காய்ந்ததும் புளியன் இலை சேர்த்து வதக்கவும், இளஞ்சூட்டில் மூட்டு, குதிகால்களில் பற்றாக போடலாம்.வலி நிவாரணியாக இருப்பதுடன் தோலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
வாய் துர்நாற்றம், மூட்டு வலிக்கு மருந்தாகும் இலை! -
Reviewed by Author
on
June 11, 2018
Rating:

No comments:
Post a Comment