வடக்கு, கிழக்கில் உதயமாகும் மாபெரும் புத்தர் சிலைகள் -
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் புத்தர் சிலைகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பத்தரமுல்லையில் இடம்பெற்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் நினைவு தினம் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 94ஆவது பிறந்த தினத்தையொட்டி நாடளாவிய ரீதியில் மாபெரும் புத்தர் சிலைகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இதன்படி வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி அநுராதபுரத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது என தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் உதயமாகும் மாபெரும் புத்தர் சிலைகள் -
Reviewed by Author
on
June 14, 2018
Rating:

No comments:
Post a Comment