கொச்சிக்கடை புனித அந்தோணியார் ஆலய வருடாந்த திருவிழா -
கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோணியார் வருடாந்த திருவிழா இன்றையதினம் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கடந்த 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழாவில் தொடர்ந்து நவநாள் ஆராதனைகள் இடம்பெற்று நேற்றைய தினம் நற்கருணை வழிபாடு மிகவும் பக்திபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்றைய தினம் மும்மொழிகளிலும் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், மாலையில் இடம்பெற்ற புனித அந்தோணியாரின் திருச்சொரூப பவணியின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
திருச்சொரூப பவணியைத் தொடர்ந்து திருச்சொரூப ஆசிர்வாதத்துடன் திருவிழா இனிதே நிறைவுற்றது.
கொச்சிக்கடை புனித அந்தோணியார் ஆலய வருடாந்த திருவிழா -
Reviewed by Author
on
June 14, 2018
Rating:

No comments:
Post a Comment