மன்னார் புதிய பேரூந்துதரிப்பிடத்திற்கான 180மில்லியன் ரூபாவில் 67 மில்லியன் ரூபாவினை காணவில்லையாம்....
மன்னாரில் அமைக்கப்படவுள்ள மன்னார் பொது பேரூந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்றது.180 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிட்டில் குறித்த வேளைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் 113 மில்லியன் ரூபாவிற்கான ஒப்பந்தமே கைச்சாத்திடப்பட்டுள்ளதாக மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.
மன்னார் நகர சபையின் 5 ஆவது அமர்வு இன்று 23-07-2018 திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது தலைமை உரை நிகழ்த்துகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
எமது செயற்பாடுகள் அனைத்துமே அபிவிருத்தியையும்,மக்களையும் மையப்படுத்தியதாக அமைய வேண்டுமே தவிர சுய நல அரசியல் நோக்குடன் பயணிப்பது உகந்தது இல்லை.
சில வேளைத்திட்டங்கள் மன்னார் நகர சபைக்கு தெரியாமலே இடம் பெற்றுள்ளது.
இனிவரும் காலங்களில் மன்னார் நகர சபைக்கு தெரியாமல் இடம் பெறுகின்ற எவ்வித செயற்பாடுகளுக்கும் அனுமதி வழங்க மாட்டோம்.
அவ்வாறு இடம் பெற்றால் நாங்கள் நகர சபையின் தலைவராகவோ அல்லது உறுப்பினர்களாகவோ இருப்பதில் அர்த்தம் இல்லை.
நகர சபையின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக நகர சபையுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளுக்கு மட்டுமே நகர சபையின் அங்கிகாரம் வழங்கப்படும்.
நகர சபையின் செயற்பாடுகளுடன் ஒத்துப்போகாத எந்த வேளைத்திட்டங்களும் நகர சபையினால் முன்னெடுக்கப்பட மாட்டாது.குறித்த திட்டங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
-மன்னார் மாவட்ட அபிவிருத்திக்கு என ஒதுக்கப்படுகின்ற நிதி எங்களினூடாகவே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.மன்னார் நகர சபைக்குற்பட்ட பகுதிகளில் நாங்கள் ஆட்சியில் இருக்கின்ற போது இன்னும் ஒருவர் வந்து ஆதிக்கம் செலுத்தி விட்டு செல்வதற்கு நாம் இடமளிக்க முடியாது.
மன்னாரில் 180 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிட்டில் அமைக்கப்படவுள்ள மன்னார் பொது பேரூந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்றது.
180 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிட்டில் குறித்த வேளைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் 113 மில்லியன் ரூபாவிற்கான ஒப்பந்தமே கைச்சாத்திடப்பட்டுள்ளது.மிகுதி 67 மில்லியன் ரூபாய் எங்கே போனது? நகர அபிவிருத்தி அமைச்சர் மற்றும் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ஆகியோரினால் கூறப்பட்ட விடையம் 180 மில்லியன் ரூபாய் நிதியிலே குறித்த திட்டங்கள் ஆராம்பிக்கப்பட்டுள்ளது என்று.
-இவ்விடையம் தொடர்பில் உரிய விளக்கத்தை நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் கைத்தொழில் வர்த்தக அமைச்சு எமக்கு வழங்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் புதிய பேரூந்துதரிப்பிடத்திற்கான 180மில்லியன் ரூபாவில் 67 மில்லியன் ரூபாவினை காணவில்லையாம்....
Reviewed by Author
on
July 24, 2018
Rating:
Reviewed by Author
on
July 24, 2018
Rating:


No comments:
Post a Comment