அண்மைய செய்திகள்

recent
-

லாவோசில் அணை உடைந்து 6000 பேர் வீடிழப்பு, நூற்றுக்கணக்கானவர்கள் மாயம்


லாவோசில் Xe Namnoy ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுவரும் அணை ஒன்று எதிர்பாராத விதமாக உடைந்ததில் 6000 பேர் தங்கள் வீடுகளை இழந்ததோடு பலர் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

லாவோசின் Attapeu மாகாணத்தில் கட்டப்பட்டு வரும் அந்த அணை உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில் உடைந்தது. இந்த துயர சம்பவத்தில் நூற்றுக்கணக்காவர்களைக் காணவில்லை, அதோடு எத்தனை பேர் இறந்தார்கள் என்பதும் தெரியவில்லை.
இன்னும் கட்டி முடியாத அந்த அணையிலிருந்து ஐந்து பில்லியன் கன மீற்றர்கள் தண்ணீர் வெளியேறியது, இது இரண்டு மில்லியன் ஒலிம்பிக் நீச்சல் குளங்களின் அளவுக்கு சமமாகும்.
நீர் மின் சக்திக்காக தாய்லாந்து போன்ற அண்டை நாடுகளையே நம்பியிருக்கும் லாவோஸ் தனது தேவைகளுக்காக பல அணைகளை கட்ட திட்டமிட்டுள்ளதோடு கட்டியும் வருகிறது.
அத்தகைய அணைகளில் ஒன்றுதான் இப்போது உடைந்துள்ளது.
இந்த அணை 2019ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வருவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மீட்பு நடவடிக்கைகள் முடக்கி விடப்பட்டுள்ளதோடு படகுகள் மூலம் மக்கள்
பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறார்கள்.




லாவோசில் அணை உடைந்து 6000 பேர் வீடிழப்பு, நூற்றுக்கணக்கானவர்கள் மாயம் Reviewed by Author on July 25, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.