அண்மைய செய்திகள்

recent
-

உங்கள் எலும்புகள் பலம்பெற வேண்டுமா?


உடல் ஆரோக்கியமாக இருக்க எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டும், எலும்புகளின் உருவ அமைப்புக்குப் புரதம் தேவைப்படுகிறது.
எனவே புரதம் நிறைந்த உணவுகளைத் தேவைப்படும் அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதுபோல, எலும்புகள் ஆரோக்கியமாக விட்டமின் சி, டி, கால்சியம் சத்துக்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
பால், பால் பொருட்கள், கேழ்வரகு, மீன், ஆரஞ்சு, சோயா, அதிக அளவு பச்சைக் காய்கறிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சர்க்கரை, ரத்த அழுத்தம் இரண்டையும் கட்டுக்குள் வைத்துக்கொண்டால், எலும்பு அடர்த்திக் குறைவு வராமல் தடுக்க முடியும்.
அத்தகைய எலும்புகளை தேய்மானம் அடையாமல் பலப்படுத்தும் அரைக்கீரையையின் பயன்களைப் பற்றி பார்க்கலாம்.
அரைக்கீரை
அரைக்கீரையானது பற்கள் தொடங்கி பாதம் வரை உள்ள எலும்புகள் பலம்பெற உதவும் கால்சியம் சத்தையும், உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய நார்ச்சத்தையும் தருகின்றன.
அரைக்கீரையை தினமும் உண்டு வருவதினால் இரும்பு சத்து, வைட்டமின் ஏ,சி சத்துக்கள், சுண்ணாம்பு சத்து போன்ற பல்வேறு நன்மைகள் நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகின்றன.

தேவையான பொருட்கள்
  • அரைக்கீரை
  • இஞ்சி
  • பனங்கற்கண்டு
செய்முறை
சிறிதளவு அரை கீரையை எடுத்து அதனை அரைத்து சாறு எடுக்கவும். இந்த சாறு 20 முதல் 30 மில்லி வரை எடுத்து அதனுடன் 10 மில்லி இஞ்சி சாறு கலக்கவும்.
பின்பு இதுடன், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு நன்கு கொதிக்க வைக்கவும், கொதிக்க வைத்த தண்ணீரை எடுத்து வடிகட்டி 48 நாட்கள் குடித்துவர எலும்புகள் பலம்பெறும், கால்சியமும் அதிகரிக்கும்.
உங்கள் எலும்புகள் பலம்பெற வேண்டுமா? Reviewed by Author on July 25, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.