தொப்பையை குறைக்க வேண்டுமா? இந்த பழங்களை எல்லாம் சாப்பிடுங்க -
உடல் பயிற்சி, உணவு முறை மாற்றம் என அனைத்து மாற்றங்களையும் செய்வோம்.
இவ்வாறு விடா முயற்சியில் ஈடுபடும் உங்களுக்கு எந்த பழங்கள் தொப்பையை குறைக்க உதவும் என்று நாங்கள் கூறுகிறோம்.
இஞ்சி,எலுமிச்சை சாறு
தினமும் இஞ்சி போட்டு கொதிக்க வைத்த நீர் வெதுவெதுப்பான பின் எலுமிச்சை சாறு கலந்து சர்க்கரைக்கு பதில் தேன் கலந்து குடித்தால் ஒரே வாரத்தில் உடல் எடை குறைவதை கான்பீர்கள். இதிலுள்ள சிட்ரிக் அமிலம், மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த விட்டமின் சி கொழுப்பை வேகமாக கரைக்கும்.அன்னாசிப் பழம்
உடல் எடையை வேகமாக குறைப்பதற்கு மிகச் சிறந்த பழங்களில் அன்னாசி முக்கியமானது. இதிலுள்ள ப்ரோமைலைன் கொழுப்பை வேகமாக குறைக்கிறது. ஜீரண சக்தியை அதிகமாக்கும். கலோரி மற்றும் கொழுப்பை உடனுக்குடன் எரிப்பதால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். அன்னாசிப் பழம் சூட்டைத் தரும், அதனால் அளவாகத்தான் சாப்பிட வேண்டும்.தக்காளி
கொழுப்பை கரைப்பதில் தக்காளிக்கு ஈடு கிடையாது என சொல்லலாம். தக்காளி துரிதமாகவும் செயல்படும். இதிலுள்ள லைகோபீன் வேகமகா மெட்டபாலிசத்தை தூண்டுகிறது. இதனல கொழுக்கு சேமிக்காமல் எரிக்கப்படுகிறது தக்காளி சாறு அல்லது சூப்பாக எடுத்துக் கொண்டால் நல்ல பலன் தெரியும்.திராட்சை
ஒரு ஆராய்ச்சியில் உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதில் திராட்சை சிறந்த பலனைத் தருகிறது என்பதை உறுதி செய்திருக்கிறார்கள். திராட்சையில் உள்ள கார்போஹைட்ரேட் எனர்ஜியை தருகிறது. காலை உணவுடன் ஒரு கப் கிரேப்ஸ் எடுத்துக்கொண்டால், இவை மற்ற உணவுகளையும் எளிதாக செரிக்கச் செய்திடும்.
தொப்பையை குறைக்க வேண்டுமா? இந்த பழங்களை எல்லாம் சாப்பிடுங்க -
Reviewed by Author
on
July 12, 2018
Rating:

No comments:
Post a Comment