அண்மைய செய்திகள்

recent
-

குடிநீரின்றித் தவிக்கும் மக்கள்! அதிகாரிகளின் கவனயீனம் -


கிளிநொச்சி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள இன்னமும் சீரான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இணைத்தலைவர்களின் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சுட்டிகாட்டியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது. இதன் போது வறட்சி நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோது,

கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் 90 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 21ஆயிரத்து 959 குடும்பங்களைச் சேர்ந்த 74 ஆயிரத்து 566 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 48 கிராம அலுவலர் பிரிவுகளில் 5346 குடும்பங்களைச் சேர்ந்த 18953 பேருக்கான குடிநீர் விநியோகம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேசத்தின் பொன்னகர் கோணாவில் போன்ற உள்ளிட்ட பிரதேசங்களில் வறட்சியால் கடுமையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்தப்பிரதேசத்திற்கு குடிநீர் விநியோகம் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இதனால் தொடர்ந்தும் மக்கள் பாதிக்கப்படுவதாக பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவரான சி. சிறீதரன்,
“கிளிநொச்சி மாவட்டத்தின் வறட்சிப் பாதிப்புக்கள் தொடர்பில் பல்வேறு கோரிக்கைககள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் பரந்தன் காஞ்சிபுரம் பகுதியில் பழுதடைந்த குழாய்க் கிணற்றினை திருத்தி வழங்குமாறும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு அறிவித்து, சம்பவ இடத்திற்குச்சென்ற அதிகாரிகள் இதில் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
வறட்சியினால் குடிநீர்த் தேவையுள்ள பிரதேசங்களுக்கு இதுவரை குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறு பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன” எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனையடுத்து நாளை மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்து அவற்றை ஒழுங்குபடுத்துவதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
குடிநீரின்றித் தவிக்கும் மக்கள்! அதிகாரிகளின் கவனயீனம் - Reviewed by Author on July 25, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.