சூரியனுக்கு 20 சூரியனோடு 20 -பிறந்த நாள் இன்று
1998 ஜூலை25 இலங்கையின் தமிழ் வானொலிஉலகின் புது மலர்ச்சியையும் புதியபுரட்சியையும் தோற்றுவித்தநாள். இன்றும் இலங்கையில் மட்டுமன்றிஉலகில் தமிழ் பேசுவோர் வாழும் இடங்களில் தனித்துவ இடம் வழங்கிரசிக்கப்படும் சூரியன் வானொலி ஒலிபரப்பைஆரம்பித்த நாள்.
அனைத்திலும் புதுமையும்-தனித் தமிழ் நிகழ்ச்சிகளில் இனிமையும் அறிவிப்பாளர் குரலில் இளமையும் கொண்டுதமிழ் வான் ஒலிபரப்பில் புதியபிரமிக்கத்தக்கமாற்றத்தைக் கொண்டுவந்த சூரியன் உடனடியாவேமக்கள் மனதில்நிரந்தரமான இடத்தைப் பிடித்துள்ளது. அன்று முதல் இன்றுவரை அசைக்கமுடியாத அலைவரிசையாக உலகம் முழுவதும் தழிழரால் நேசிக்கப்படுகின்றமுதற்தரவானொலி என்ற நாமத்திற்குமிகப் பொருத்தமானதாகவானலையில்வலம் வந்துகொண்டிருக்கிறான் சூரியன்.
ஒரேமாதிரியாக இருந்துவந்ததமிழ் வானொலிபோக்கில் சடுதியானபாய்ச்சலும்ääபுத்துணர்ச்சியானமாற்றமும் ஏற்பட்டது. சூரியன் வானொலிவருகைக்கு பின்னரே இலங்கையின் ஒலி-ஒளிபரப்புத் துறையில் புதிய சிந்தனையுடன்-புரட்சிகரமாற்றங்களைகொண்டுவருவதில் இன்றுவரைமுன்னோடியாக இருக்கும் ஆசிய ஊடகவலையமைப்பின் தலைவரான திரு. ரெய்னோசில்வாஅவர்களின் தீர்க்கமானசிந்தனையும்-தீர்க்கதரிசனம் கொண்டவழிநடத்தலும் சூரியனைரசிகர்கள் மத்தியில் எப்பொழுதுமேஉயர்ந்த இடத்திலும்-அதேவேளை-தங்கள் வீட்டின் செல்லக் குழந்தையாகவும் சூரியனை இரசிக்கவைத்திருக்கிறது.
அந்தந்தநேரத்திற்குஏற்றதுபோலநேயர்களின் மனம் அறிந்து வடிவமைக்கப்பட்டநிகழ்ச்சிகள்-அதிகாலையில் அருணோதயத்தில் இருந்துவிடியற்காலைரீங்காரம் வரைரசிகர்களைஅங்கிங்கே அசையவிடாமல்-கட்டிப்போட்டுவைத்திருக்கும் மாயாஜாலம் சூரியனுக்குமட்டுமே உரியது.
நிகழ்ச்சிப் பணிப்பாளர்
A.R.V.லோஷன் தலைமையில் இளமைத்துடிப்பும் பரந்ததேடலும் தடையில்லாததெளிவான தமிழும் கொண்ட சூரியன் அறிவிப்பாளர்கள் குழு. சூரியனை எப்போதுமே உயர்தரத்திலே நிலை நிறுத்துவதில் உறுதியாக இருக்கிறது. சந்துரு-டிலான்-ரிம்ஷாட்-நிஷாந்தன் மற்றும் மேனகா போன்ற சிரேஷ்ட்ட அறிவிப்பாளர்கள் உட்பட ஒவ்வொரு காலத்திலும் சூரியனோடு சேர்ந்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து அவர்களது செல்லப்பிள்ளையாகமாறியிருக்கும் சூரியனின் அத்தனைஅறிவிப்பாளர்களும் செய்திவாசிப்பாளர்களும் நட்சத்திரம்தான்.
வார இறுதிநிகழ்ச்சிகளில் மாறிவரும் இரசனைக்குஏற்பகாலத்திற்குஏற்றமாற்றங்களோடுபுதியஒலிபரப்பாளர்களதுபுதுமைவீச்சுக்கள் வழியாகநேயர்களுக்குவித்தியாசமான இரசனையைவழங்கிவரும் சூரியன்ääநேயர்களின் அன்றாடவாழ்கையின் ஓர் அங்கமாக இருக்கின்றான்.
சூரியனைமக்கள் மத்தியில் நம்பகத் தன்மையோடும் அசைக்கமுடியாவிசுவாசத்தோடும் கொண்டுபோய்ச் சேர்த்தபெரும் பங்கு சூரியன் செய்திகளுக்குஉள்ளது. அன்றுமுதல் இன்றுவரை சூரியன் செய்திகள் என்றால் மக்களுக்கு ஓர் தனியானநம்பிக்கையும் தமதுவாழ்வியலோடுஒன்றித்தசெய்திகளைதருகின்றஒரேஒருசெய்திச் சேவையாகவிளங்குகின்றதுஎன்றஆறுதல் உணர்வுஏற்பட்டுள்ளது. தினமும் நான்கு வேளை பிரதான செய்திகளோடு மக்களுக்கு தேவையானவற்றை சமூகமுன்னேற்ற நோக்கோடு வேகமாகவும் துல்லியமாகவும் திறம்பட சூரியன் செய்திப் பிரிவுசெயற்படுவதற்கு விக்னேஸ்வரன் சதீப் குமார்ஸ்ரீ நாகவாணி ராஜா-சிகாமணிபோன்ற சிரேஷ்ட்ட செய்தி ஆசிரியர்களின் பங்களிப்புடன் புது உத்வேகம் கொண்ட இன்னும் பல உதவி செய்தியாசிரியர்கள் செய்திப்பிரிவில் பணியாற்றுகின்றார்கள்.
ஓவ்வொருவெற்றிகளுக்குபின்பும்ääமறைமுகமாககைகோர்த்துசெயற்படுபவர்களில் முக்கியபங்கு சூரியனின் திட்டமிடல் விரிவாக்கல் பிரிவினரையேசாரும். இளமைத்துடிப்புடனும் செயற்பாடுகளில் வேகமும் கொண்டு சூரியசொந்தங்களுடன் மிகநெருக்கமாக உறவாடிஅசைக்க முடியாததனி அணியாக முத்திரைபதித்துள்ளது சூரியனின் திட்டமிடல் விரிவாக்கல் பிரிவு.
திட்டமிடல் விரிவாக்கல் பிரிவின் உதவிப் பொதுமுகாமையாளர் அஷ்ரப் அவர்களின்வழிநடத்தலில் அஜித்குமார்-கார்த்திக்-சுரேன்-ரீஷ்பன்-ரொஷன் மற்றும் புனிதன் உள்ளிட்ட பலர் சூரியனின் வெளிக்களசெயற்பாடுகளைமுன்னெடுக்கின்றனர்.
“தொட்டதெல்லாம் வெற்றி”வெற்றி இது சூரியனுக்கே உரித்தான தனிவசகம் எனலாம். ஆண்டுகள் 20ஜ ஆண்டவனாக இன்னும் பலசாதனைகளுடன் சூரியன் தன் சொந்தங்களுடன் 20வது ஆண்டைவரவேற்ககாத்திருக்கிறான்.
நாட்டில் எத்திக்குசென்றாலும் வானொலிஒன்றின் சத்தம் ஓங்கிஒலித்தால் நிச்சயமாகஅது சூரியனாகத்தான் இருக்கும். அந்தளவுதன் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தமுதல்வனாக தொடர்கிறான். வெறுமனமே நிகழ்ச்சிகளில் பாடல்கள் மட்டுமல்லாதுஅந்தந்தகாலத்திற்குஎதுதேவையோஅவற்றைஉடனேவழங்குவதில் சூரியன் என்றும் பின்னிற்பதில்லை. ஏராளமானசமூகசேவைகள் - மக்கள் மனங்களில் என்றும் நீங்காதஒன்று. உதவும் கரங்கள் என்றநாமத்தை இன்றுஎங்குகேட்டாலும் அதற்கானஅடித்தளமும் எங்கள் சூரியன்தான்.
சூரியனுக்கு 20 சூரியனோடு 20 எனநாம் கொண்டாடும் இந்தத் தருணத்தில் நகமும் தசையும் போல் ஒன்றோடுஒன்றாக சூரியனோடுபிணைந்திருக்கம் எமது சூரியசொந்தங்களுக்குமனம் மகிழும் பரிசில்களையும் அள்ளிவழங்கிக்கொண்டிருக்கிறான் எங்கள் தங்கச் சூரியன்.
உலங்குவானூர்தியில் பறந்து–வலம்புரியாய் இல்லங்கள் மகிழ்ந்துபெறுமதியானபரிசில்களால் தன் உண்மை நேயர்களைமகிழ்விக்கும் சூரியன்ää இப்போது ஒவ்வொருநாளும் பணப்பரிசில்களால் மகிழ்விக்கிறான். இவை மட்டுமல்லாமல் 20வது அகவைநோக்கி எவராலும் அசைக்கமுடியாத எந்தவொருபண்பலையாலும் நெருங்கமுடியாத வானொலிதரப்படுத்தல்களிலும் அன்றுமுதல் இன்றுவரை முதற்தரமகுடம் ஏந்திவானலை ராஜாங்கம் செய்கிறான் எங்கள் தங்கச் சூரியன்.
ஆண்டாண்டுகாலமாய் ஆண்டுவரும் சூரியன் அகவை இருபதிலும் அசைக்கமுடியாத உயிருக்கு நிகராய் சூரியனைரசிக்கும் சொந்தங்களுடன் இணைந்துபண்பலைதனில் இன்னும் புதுமைகளைபடைக்ககாத்திருக்கிறான். இனியம் தொடரம் சூரியனின் ஆட்சி.
சூரியனுக்கு 20 - சூரியனோடு 20



சூரியனுக்கு 20 சூரியனோடு 20 -பிறந்த நாள் இன்று
Reviewed by Author
on
July 25, 2018
Rating:

No comments:
Post a Comment