உலகத் தலைவர்களை சந்திக்க தாமதமாக செல்லும் புடின்:
பின்லாந்து நாட்டில் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும் இடையே முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் உலகத் தலைவர்களை காத்திருக்க வைக்கும் புடினின் வினோத குணம் குறித்தும், அவரால் காத்திருந்த உலகத் தலைவர்கள் குறித்தும் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது.
2014 ஆம் ஆண்டு ஜேர்மனியின் சான்சிலர் ஆஞ்செலா மெர்க்கலை சந்திக்க நேரம் ஒதுக்கிய ரஷ்ய ஜனாதிபதி புடின் சுமார் 4 மணி நேரம் தாமதமாக சென்றுள்ளார்.
புடின் தாமதமாக செல்லும் அல்லது காத்திருக்க வைத்த தலைவர்கள் வரிசையில் ஜேர்மன் சான்சிலரே முதலிடத்தில் உள்ளார். இவர் காத்திருந்தது சுமார் 4 மணி 15 நிமிடங்கள்.
இதற்கு அடுத்த வரிசையில் இருப்பவர் உக்ரைன் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச். இவர் 4 மணி நேரம் புடினுக்காக காத்திருந்துள்ளார்.
இந்த வரிசையில் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தும் உள்ளார். இவர் சுமார் 14 நிமிடங்கள் புடினுக்காக காத்திருந்ததாக அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகத் தலைவர்களின் பெயரும் காத்திருந்த நேரமும்
- ஜேர்மன் சான்சிலர், ஆஞ்செலா மெர்க்கல்- சுமார் 4 மணி 15 நிமிடம்
- உக்ரைன் முன்னாள் ஜனாதிபதி, விக்டர் யானுகோவிச் - 4 மணி நேரம்
- உக்ரைன் முன்னாள் பிரதமர் யூலியா டைமோஷெங்கோ - 3 மணி நேரம்
- பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லூகாஷெங்கோ - 3 மணி நேரம்
- ஜப்பான் பிரதமர், ஷின்ஜோ அபே - 3 மணி நேரம்
- இந்திய பிரதமர், நரேந்திர மோடி - ஒரு மணி நேரம்
- திருத்தந்தை பிரான்சிஸ் - 50 நிமிடங்கள்
- அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி, பாரக் ஒபாமா - 40 நிமிடங்கள்
- பிரித்தானிய மகாராணி, இரண்டாம் எலிசபெத் - 14 நிமிடங்கள்
உலகத் தலைவர்களை சந்திக்க தாமதமாக செல்லும் புடின்:
Reviewed by Author
on
July 17, 2018
Rating:

No comments:
Post a Comment