அண்மைய செய்திகள்

recent
-

காசநோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ரோபோ -


மருந்துகளுக்கு எதிர்ப்புள்ள காசநோயைக் கண்டுபிடிக்கும் பொருட்டு சிறிய வகை ரோபோ ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது 2016 ஆம் ஆண்டிலேயே கனடாவின் புறோக் பல்கலைக்கழகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நுணுக்குக்காட்டிக்குரிய ரோபோ.
இவ்வகை சிறு ரோபோக்கள் எவ்வாறு சிகிச்சையளிக்க உதவுகின்றது தொடர்பான விடயங்கள் Chemical Science பக்கத்தில் கடந்த யூலை 2 அன்று வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் இறப்பிற்கு காரணமான முக்கிய 10 நோய்களில் காச நோயும் ஒன்று. 2016 இல் மட்டும் கிட்டத்தட்ட 1.7 மில்லியன் மக்கள் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. HIV-positive நோயாளிகளில் இது இறப்பிற்கு முக்கிய காரணி.
இதை போக்கவதற்கு தடையாக இருப்பது மருந்துகளுக்கு எதிர்ப்புள்ள காச நோயாகும். 2016 இல் 600 000 காச நோயளர்கள் காணப்பட்ட மருந்துச் சிகிச்சைக்கு எதிப்பானவர்களாக காணப்பட்டிருந்தனர், இதில் 240 000 பேர் இறந்து போயிருந்தனர்.

இங்கு ஆய்வாளர்களின் நோக்கம் இவ்வகை காச நோயை அதன் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை வழங்குவது.
2016 மேற்படி பல்கலைக் கழகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டிருந்த ரோபோவினால் குருதியிலுள்ள நோயை வெறும் 30 நிமிடங்களில் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது.

ஆயினும் தற்போதைய ரோபோ காரநோய்க்கு காரணமான பக்ரீரியாவில் ஏற்படக்கூடிய மாறல்களைக் கூட கண்டுபிடிக்கக்கூடியது.
இவ் ரோபோவை தயாரிக்க விஞ்ஞானிகள் 20 நனோமீட்டர் தங்கத்தை பயன்படுத்தியிருந்தனர்.
இது வருங்காலத்தில் காச நோய்க்கெதிராக பயன்பாட்டில் இருக்கப்போகிறது என்பதில் ஜயமில்லை.

காசநோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ரோபோ - Reviewed by Author on July 26, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.