இலங்கை தமிழ் அகதிகள் குடும்பங்களுக்கு காணி வழங்க கோரிக்கை! -
அந்தமான் - நிக்கோபார் தீவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரான பிஷ்னு பாடா ரே இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
சிறிமா - சாஸ்திரி உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கையில் இருந்து பல தமிழர்கள் குடும்பங்கள் அகதிகளாக வந்து அந்தமான் - நிக்கோபார் தீவில் உள்ள ஷோயல் வளைகுடா பகுதியில் குடியேறினர்.
இவர்களுக்கு வாழ்வாதார உதவியாக இரண்டு ஏக்கர் காணி வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 1976ம் ஆண்டு மேலும் 48 இலங்கை தமிழ் குடும்பங்கள் அந்தமானில் உள்ள கட்சல் தீவில் தஞ்சமடைந்தனர்.
இவர்களுக்கு வெறும் அரை ஏக்கர் காணி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆகையினால் குறித்த இந்த மக்களுக்கும் மேலதிகமாக ஒன்றரை ஏக்கர் காணி வழங்க வேண்டும்.
இவர்களுக்கு ஒன்றரை ஏக்கர் காணி வழங்கப்படும் என கடந்த காலங்களில் வாக்குறுதி வழங்கப்பட்ட போதிலும் அவை நிறைவேற்றப்படவில்லை.
ஆகையினால் குறித்த 48 குடும்பங்களுக்கு காணிகள் வழங்க வேண்டும்” என கோரியுள்ளார்.
இலங்கை தமிழ் அகதிகள் குடும்பங்களுக்கு காணி வழங்க கோரிக்கை! -
Reviewed by Author
on
July 28, 2018
Rating:

No comments:
Post a Comment