ஈழ அகதிகள் இரண்டு பேர் கைது -
தமிழகத்திலிருந்து படகு மூலம் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு பயணிக்க முயற்சித்த இரண்டு ஈழ அகதிகள் இராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மண்டபம் கரையோர பாதுகாப்பு பொலிஸாரால் அவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள தனித்தீவான பம்டன் பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சயின்சன் (26), ஜெயகுமார் (27) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
ஈழ அகதிகள் இரண்டு பேர் கைது -
Reviewed by Author
on
July 29, 2018
Rating:

No comments:
Post a Comment