பிழை விட்டது நீங்கள் குற்றம்சாட்டுவது முதலமைச்சரையா?
தமிழ் மக்களின் விடயத்தில் மிகப்பெரும் பிழையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழைத் துள்ளதென்பது மறுதலிக்க முடியாத உண்மை.
இந்த உண்மையை கூட்டமைப்பினர் பதவி யில் இருக்கும் வரைக்கும் அவர்கள் புரிந்து கொள்ளப்போவதில்லை என்பது நிறுதிட்டமான உண்மை.
கூட்டமைப்பு சரியாக நேர்மையாக நடந்தி ருக்குமாயின் தமிழ் மக்கள் இத்துணை தூரம் துன்பப்பட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.
உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினைகளை பட்டவர்த் தனமாக உள்ளும் புறமும் எடுத்துரைக்கும் என்றே தமிழ் மக்கள் நம்பியிருந்தனர்.
அந்த நம்பிக்கை காரணமாக தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புக்கு தங்களின் வாக்குகளை வழங்கினர்.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏதோ வொரு இராஜதந்திரோபாயத்துடன் செயற்படு வதுபோல தன்னைக் காட்டிக் கொண்டு தமிழ் மக்களுக்கு பச்சைத்துரோகம் செய்துள்ளது.
இந்தத் துரோகத்தனத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்ற எல்லோருக்கும் பங்கில்லை என்றாலும் பிழை நடக்கிறது துரோ கம் இழைக்கப்படுகிறது என்பது அறிந்த போதாவது அதுபற்றி கூட்டமைப்பின் தலை மைக்கு இடித்துரைத்திருக்க வேண்டும்.
ஆனால் அந்தத் தர்மத்தை செய்யத் தவறி யதால் துரோகத்துக்கு துணைபோன பாவபழி ஏனையவர்களைச் சேரவே செய்யும்.
எதிர்த்துக் கதைத்தால் அடுத்தமுறை ஆச னம் கிடைக்காது என்பது ஒரு சாராரின் நிலைப் பாடு.
இன்னொரு சாராரோ கூட்டமைப்பில் இருக் கக்கூடிய ஒரு சிலருக்கு பந்தம் பிடித்தால் தான் தங்கள் அரசியல் சீவியம் நகரும் என்ற நிலைப்பாடு.
இதன்காரணமாக சகல வழிகளிலும் தமிழ் மக்களுக்குப் பாதகம் செய்யப்பட்டிருக்கிறது.
சர்வதேச போர்க்குற்ற விசாரணை முடிந்து விட்டது என்பது முதல் இலங்கை அரசுக்குக் காலஅவகாசம் வழங்க வேண்டுமென ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் கூறுவது வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்தது படு மோசமான பிழையாகும்.
இதனை இன்னமும் புரிந்து கொள்ளாத தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பது அதிசய மான உண்மை.
எனினும் தமிழ் மக்களுக்கு அவர்கள் கெடுதி நினைக்கமாட்டார்கள் என்ற நம்பிக் கையே அதற்குக் காரணமாகவுள்ளது எனும் போதுதான் நெஞ்சம் பொறுக்கவில்லை.
தங்கள் அரசியல் தலைமை மீது இத் துணை நம்பிக்கை வைத்திருந்தும் அதனை மீறி தமிழ் மக்களுக்குக் கெடுதி செய்வதென் பது சாதாரண விடயமல்ல.
என்ன செய்வது எங்கள் தலைவிதி அப்படிப் போலும். அதனால்தான் அழைத்து வந்தவரை யும் துரத்தி விடப்பெரு முயற்சி நடக்கிறது.
NANRI-VALAMPURI
பிழை விட்டது நீங்கள் குற்றம்சாட்டுவது முதலமைச்சரையா?
Reviewed by Author
on
July 19, 2018
Rating:
Reviewed by Author
on
July 19, 2018
Rating:


No comments:
Post a Comment