அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சமய நல்லிணக்க செயற்பாடுகளை மக்களுக்கு கொண்டு செல்வதில் ஊடகங்களின் பங்களிப்பு-


சமய நல்லிணக்க செயற்பாடுகளை மக்களுக்கு கொண்டு செல்வதில் ஊடகங்களின் பங்களிப்பு எனும் கருப்பொருளில் சர்வமத சகவாழ்வு கலந்துரையாடல் இன்று புதன் கிழமை 29-08-2018 காலை 9.30 மணியளவில் மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் வாழ்வுதய மண்டபத்தில் இடம் பெற்றது.


மன்னார் வாழ்வுயத்தில் திட்ட இணைப்பாளர் நீ.றொண்சன் தலைமையில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் வாழ்வுதய இயக்குனர் அருட் தந்தை செ.அன்ரன் அடிகளார்,திட்ட கண்காணிப்பு இணைப்பாளர் எஸ்.யேசுதாசன் உற்பட மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் வாழ்வுதயத்தினால் கிராமங்களில் முன்னெடுக்கப்படவுள்ள சமய நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பிலும்,மக்களுக்கு கொண்டு செல்வதில் ஊடகங்களின் பங்களிப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் 13மறைமாவட்டங்களில்  65 கிராமங்களை உள்ளடக்கியதாக குறித்த நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 3 வருட திட்டத்தின் போது 2018-2020
  1. வட்டக்கண்டல்
  2. ஆண்டாங்குளம்
  3. அளவக்கை
  4. அடம்பன்
  5. செம்மண் தீவு ஆகிய 5 கிராமங்கள் குறித்த நிகழ்ச்சி திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

-குறித்த கிராமங்களில் பல்வேறு நிகழ்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.


குறித்த நிகழ்ச்சி திட்டங்கள் தொடர்பிலும், அவற்றை மக்களுக்கு கொண்டு செல்வதில் ஊடகங்களின் பங்களிப்பு குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செயற்திட்டத்திற்கு நிதி அனுசரனையாளர்கள்-
Caritas Norway
NORAD
இச்செயற்திட்டத்திற்கு  காலப்பகுதி
March2018- December 2020














மன்னாரில் சமய நல்லிணக்க செயற்பாடுகளை மக்களுக்கு கொண்டு செல்வதில் ஊடகங்களின் பங்களிப்பு- Reviewed by Author on August 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.