டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு -
கடந்த ஏழு மாத காலப்பகுதியில் மாத்திரம் நாட்டில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32,605ஆக அதிகரித்துள்ளதென தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவிக்கின்றது.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பின்னர் டெங்கு காய்ச்சலினால் ஜுலை மாதத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த பிரிவு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி ஜனவரி மாதத்தில் 7,249பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்ததுடன், அதனை தொடர்ந்து டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருந்தது.
எனினும் கடந்த ஜுன் மாதம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்திருந்ததுடன், ஜுலை மாதம் அதனை விடவும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்ததாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி ஜுன் மாதம் 5477பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த அதேவேளை கடந்த ஜுலை மாதம் 5886 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்ததாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு குறிப்பிடுகின்றது.
டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு -
Reviewed by Author
on
August 05, 2018
Rating:

No comments:
Post a Comment