அண்மைய செய்திகள்

recent
-

அம்மா...... அம்மா.....

அம்மா அம்மா

அம்மா அம்மா
எந்தன் அம்மா
நீ இல்லை என்றால்
நானே சும்மா

ஊணும் உயிரும் தந்து
உன்னைக்காணவும்
உலகை காணவும்
உரமானவள்  வரமானவள் -அன்னையே

உண்ண மறந்து
உறக்கம் துறந்து
உருக்கி தன்னை
உதிரம் புரதமாக்கி.
உயிரானவள்-அன்னையே

கனவினிலே சுமந்தாயே
கருவினிலே சுமந்தாயே
நினைவிலும் சுமந்தாயே
நிஜமான என் தாயே....

உயிர்கள் எல்லாம்
உலகில் பயிர்கள் போல
உருப்பெற்று உலாவ
உதயமானவள் அன்னையே

உலகினில் எல்லாம்
உன்னதமில்லையம்மா
உன்னைத்தவிர
உலகினிலே சிறந்தது தாய்மையே

அன்புக்கும் பண்புக்கும் அரணானவள்
ஆண்டவனுக்கும் நிகரானவள்
அன்னையல்லவா...இதுதான்
அகிலத்தில் உன்மையல்லவா...

கவிஞர்-வை.கஜேந்திரன்
("வசந்தம்" கவிதை தொகுப்பில் இருந்து)

அம்மா...... அம்மா..... Reviewed by Author on August 12, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.