கருணாநிதி உடல்நிலை திடீர் பின்னடைவு! மருத்துவமனைக்கு விரைந்த குடும்பத்தினர் -
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில், இன்று காலை பின்னடைவு ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கருணாநிதிக்கு பத்தாவது நாளாக இன்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடைசியாக ஜூலை 31ஆம் திகதி, காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவரது கல்லீரல் நோய் தொற்று, தொடர்பாக சில சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும், வயது முதிர்வு காரணமாகவும், சில நாட்கள் கருணாநிதி மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கருணாநிதி குடும்ப உறுப்பினர்களுடனும், டாக்டர்களுடனும் ஆலோசித்தபோது, கருணாநிதியின் உடல்நிலையில் இன்று காலை பின்னடைவு ஏற்பட்டதாகவும், தற்போது தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி உடல்நலம் பெற இறைவனை பிரார்த்திக்கின்றேன். மேலதிக தகவல்களை மருத்துவமனைதான் தெரிவிக்கும் என்றார்.
கருணாநிதி உடல்நலத்தில் பின்னடைவு ஏற்படுவதும், மீள்வதும் கடந்த சில நாட்களாக நடைபெறும் நிகழ்வு என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான முக அழகிரி தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார் என தெரிவித்துள்ளார்.
கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பது தி.மு.க. தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் இன்று மருத்துவமனைக்கு விரைந்தனர். அவரது மனைவி தயாளு அம்மாள் முதன் முதறையாக கருணாநிதியைக் காண இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.
ராஜாத்தி அம்மாள், மு.க.ஸ்டாலின், கனிமொழி, செல்வி ஆகியோர் மருத்துவமனையில் உள்ளனர். துரை முருகன் உள்ளிட்ட தி.மு.க. மூத்த தலைவர்களும் இன்று மதியம் மருத்துவமனைக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருணாநிதி உடல்நிலை திடீர் பின்னடைவு! மருத்துவமனைக்கு விரைந்த குடும்பத்தினர் -
Reviewed by Author
on
August 06, 2018
Rating:

No comments:
Post a Comment